என்னது..! அன்பை முறிக்கும் உணவா?
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு புட்டு. அங்கிருக்கும் அதிக பேருக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. என்னதான் நமக்கு பிடித்தமான உணவு என்றாலும் அதனை தினமும் சாப்பிட முடியுமா?
அந்த உணவே நமக்கு பிடிக்காத உணவாக மாறிவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக பதிவு ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் ஒரு படம் இடம்பெற்றுள்ளது. அந்த படத்தில் ஒரு பள்ளியில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடிக்காத உணவு ஒன்றை எழுத வேண்டும் என கேட்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு சிறுவன் எழுதிய விடைதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் சிறுவன் ஒருவன் தனக்கு மிகவும் பிடிக்காத உணவு என்றால் அது புட்டுதான். புட்டு என்பது ஒரு கேரள உணவு.
இந்த உணவை செய்வது மிகவும் எளிது என்பதால் தினமும் என்னுடைய அம்மா இதனை சாப்பாட்டிற்கு செய்வார். அவர் செய்த 5 நிமிடங்களில் அந்த புட்டு கல் போல் கடினமாக மாறிவிடும்.
அதன் பின்னர் அதனை சாப்பிட முடியாது இதற்கு வேறு உணவு கொடுங்கள் என்று கேட்டால் அதற்கு என்னை திட்டுவார்கள். இதனால் நான் அழுதுகொண்டு பசியோடு இருப்பேன். ஆனால் கடைசிவரை புட்டை சாப்பிட மாட்டேன். புட்டு அன்பை முறிக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
