Connect with us

சத்துணவில் குளறுபடி! குழந்தைகளுக்கான முட்டை கெட்டுப்போனது! சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்!

முட்டை

செய்திகள்

சத்துணவில் குளறுபடி! குழந்தைகளுக்கான முட்டை கெட்டுப்போனது! சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்!

சத்துணவில் குளறுபடி! குழந்தைகளுக்கான முட்டை கெட்டுப்போனது! சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்!

தமிழகத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. அந்த மதிய உணவு திட்டத்தினை எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் சத்துணவில் முட்டை இணைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆரோக்கியமானதாக வழங்கப்பட்டு வந்தது. முட்டை

ஆனால் இந்த சத்து உணவிலும் கூட பல அமைப்பாளர்கள் லஞ்சம் அடிப்பதும், திருடுவதும் அவ்வப்போது நிகழ்கிறது. பல நேரங்களில் கெட்டுப்போன பொருட்களையும் கலந்து மாணவர்களுக்கு  ஆங்காங்கே நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது கெட்டுப்போன முட்டையை வழங்கிய சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அருகே மாணவர்களுக்கான முட்டை கெட்டுப்போன புகாரில்   சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பிச்சம்பாளையம் அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்தார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர். முட்டைகளை தரம் பார்த்து மூன்று நாளில் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யாததால் மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கெட்டுப்போன 610 முட்டைகளை பதிலாக புதிய 610 முட்டைகளை விநியோகஸ்தர் வழங்கியுள்ளனர். மாணவர்களுக்கான 300 சத்துணவு முட்டைகள் கெட்டுப் போனதால் மகேஸ்வரி குப்பையில் வீசியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top