Connect with us

ஆப்கானிஸ்தானில் தாண்டவமாடும் உணவுப் பற்றாக்குறை.. நார்வேயிடம் உதவி கேட்டுள்ள தாலிபான்கள்

Untitled 95

செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தாண்டவமாடும் உணவுப் பற்றாக்குறை.. நார்வேயிடம் உதவி கேட்டுள்ள தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாண்டவமாடும் உணவுப் பற்றாக்குறை.. நார்வேயிடம் உதவி கேட்டுள்ள தாலிபான்கள்

ஆப்கானிஸ்தான் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது, சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை தாலிபான்களிடம் ஒப்படைப்பதாக அமெரிக்க முடிவு எடுத்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பியது. அதன்பின்னர் தாலிபான்கள் தங்களது ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக வசித்த மக்கள் தாலிபான்கள் ஆட்சி வரவிருப்பதையொட்டி நாட்டைவிட்டு குடும்பத்துடன் ஓடினர்.

தாலிபான்கள் நாட்டில் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி உள்ளனர்.

அவர்கள் கட்டுப்பாடுகளை புகுத்துவதில் காட்டிய ஆர்வத்தை பொருளாதாரத்தைச் சீர் செய்வதில் காட்டவில்லை.

இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவுப் பற்றாக்குறைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனைச் சரிசெய்ய தாலிபான்கள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் உணவுப்பற்றாக் குறையைப் போக்க உதவி கேட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி அமீர் கான் தலைமையிலான குழு ஒன்று இதுகுறித்த பேச்சுவார்த்தையினை நடத்த நார்வே சென்றுள்ளது.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top