இலங்கையில் தொடங்கியது உணவு தட்டுப்பாடு! சிக்கித் தவிக்கும் மக்கள்!!
இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. இருப்பினும் இலங்கையில் விரைவில் உணவுப் பொருள் தட்டுப்பாடு நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையில் அடுத்த மாதம் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் என்று அந்நாட்டு எம்பி தகவல் அளித்திருந்தார். இதனால் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து உணவு பொருட்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருவதாக தெரிகிறது. மக்களின் போராட்டங்களுக்கு பயந்து வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டல்களில் இலங்கை அமைச்சர்கள் தஞ்சமென தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இலங்கையில் எரிபொருள், வீட்டு உபயோகப் பொருட்களை தொடர்ந்து தட்டுப்பாடு நீடிக்கிறது என்றும் தெரிகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க அங்கன்வாடிகளில் விற்பனை நிலையங்களிலும் மக்கள் பல மணி நேரம் காத்துக் கொண்டுள்ளனர்.
