ரேஷன் அரிசியை கடத்தும் பெரும்புள்ளிகளை தட்டிதூக்கும் உணவுத்துறை செயலாளர்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பெரும்புள்ளிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, நெல் கொள்முதல், ரேஷன் கடைகளிலும் குற்றங்களில் ஈடுபடும் கருப்பு ஆடுகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தஞ்சையில் நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி:

தஞ்சை பிள்ளையார் பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாத்திட கீழே சிமென்ட் தளமும் இரும்பால் ஆன மேற்கூரையும் அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருடன் ஆய்வு செய்த ஜெ.ராதாகிருஷ்ணன்

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க நிரந்தர தீர்வாக முதல்வர் உத்தரவுப்படி 35 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

இதன் மூலம் 2.86 மெட்ரிக் டன் நெல் மழையால் நனையாமல் பாதுகாத்திட முடியும் இந்த பணிகள் அக்டோபர் மாதம் 31 ம் தேதிக்குள் நிறைவடையும் என்றவர்,

ரேஷன் அரிசியை கடத்துபவர்களை கைது செய்து வருகிறோம், இனி வாகன ஓட்டுநர் போன்றவர்களை கைது செய்யாமல், ரேஷன் அரிசியை கடத்தும் பெரும் புள்ளிகளை கைது செய்யப்படுவர் என்றவர்,

நெல் கொள்முதலில் கையூட்டு பெருவது, ரேஷன் கடையில் மோசடி ஆகிய குற்றங்களில் ஈடுபடும் கருப்பு ஆடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைப் போலவே குறுவை சாகுபடி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றவர், டெல்டா மாவட்டங்களில் 722 கொள்முதல் நிலையங்கள் மூலம் குறுவை நெல் கொள்முதல் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment