Connect with us

கோயம்பேட்டுக்கு மாம்பழம் வாங்க போறீங்களா?… ‘ரூ.5 ஆயிரம் அபராதம்’… உஷார் மக்களே!

WhatsApp Image 2022 04 27 at 9.51.10 AM

வாழ்க்கை முறை

கோயம்பேட்டுக்கு மாம்பழம் வாங்க போறீங்களா?… ‘ரூ.5 ஆயிரம் அபராதம்’… உஷார் மக்களே!

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் ராசயன பவுடர் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோடை கால சீசன் தொடங்கிவிட்டாலே கொளுத்தும் வெயிலோடு, கும்மென மனம் வீசும் மாம்பழ சீசனும் ஆரம்பமாகிடும். தமிழ்நாட்டில் அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டாலும், சீசனுக்குள் விற்க வேண்டும் என்ற ஆசையால் அதனை இயற்கையாக பழுக்க வைப்பதற்கு பதிலாக, வியாபாரிகள் ரசாயன கலவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இணைந்து இன்று அதிகாலை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் ராசயனம் பவுடர் கலந்து பழுக்கவைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்கள் மற்றும் 900 கிலோ அவக்கோடா பழங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், சென்னை கோயம்பேட்டில் இன்று அதிகாலை உணவு பாதுகாப்புதுறை மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் எத்திலின் ரசாயன பவுடர் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்கள் மற்றும் அவக்கோடா எனும் பட்டர் ஃபுரூட் 900 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரசாயனங்கள் வைத்து பழங்களை வைத்திருந்த வியாபாரிகள் மீது முதற்கட்டமாக 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வாழ்க்கை முறை

To Top