Connect with us

மட்டன் பிரியாணியில் புழு!! உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை!!

mutton biryani

தமிழகம்

மட்டன் பிரியாணியில் புழு!! உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை!!

சென்னை அடுத்த தாம்பரத்தில் வசித்து வருபவர்கள் விக்னேஷ், சுசிந்தர் பாலாஜி, கேபா ஆகியோர் நேற்று தனியார் உணவகத்தில் மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.

அப்போது ஒரு மட்டன் பிரியாணியில் புழு ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுதொடர்பாக 3 பேரும் கடை ஊழியரிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் கத்தரிக்காயில் புழு இருந்ததாக உணவக உரிமையாளர் கூறியுள்ளார்.

அதோடு புழுவை எடுத்து போட்டு விட்டு சாப்பிடுமாறு அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இவற்றை பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் பிரியாணியில் புழு இருந்த விஷயம் தெரியவரவே அவர்களும் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தாம்பரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் பிரியாணியில் புழு இருந்ததாக இளைஞர்கள் அழித்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இத்தகைய சோதனையில் பல்வேறு கெட்டுப்போன பொருட்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top