Connect with us

திடீரென்று வந்த உணவு பாதுகாப்புத்துறை!! மாட்டிக்கொண்ட ஹோட்டல்? ஈரோட்டில் பரபரப்பு;

CS Meals Hotel 1

செய்திகள்

திடீரென்று வந்த உணவு பாதுகாப்புத்துறை!! மாட்டிக்கொண்ட ஹோட்டல்? ஈரோட்டில் பரபரப்பு;

சில தினங்களாகவே நம் தமிழகத்தில் உள்ள பல ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர். ஏனென்றால் பல உணவகங்களில் பழைய பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்து வந்தது.

மேலும் பல ஹோட்டல்களில் உணவுகளில் பூச்சிகள் உள்ளிட்டவர்கள் கிடப்பதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியானது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வினை செய்து கொண்டு வந்தனர்.

அந்த வகையில் இன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் திடீரென்று அதிகாரிகள் சோதனையில் இறங்கினர் ஈரோடு மாவட்டம் குமலன் குட்டை, பழைய பாளையம், பெருந்துறை சாலையில் உள்ள ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உணவகம் ஒன்றில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top