ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் நிலவி வருகிறது. இதற்கு பல உலக நாடுகள் கண்டங்கள் தெரிவித்தும் பல்வேறு பொருளாதரக் தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.
இதன் எதிரொலியாக ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் வடை, பூரி போன்ற எண்ணெய் பண்டங்களின் விலையினை சிறிய அளவில் ஹோட்டல்கள் உயர்த்தி வருகின்றனர்.
இந்த உயர்வுக்கு பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் எண்ணெய் தின் பண்டங்கள் தயார் செய்வதற்கு அதிக செலவு ஆகுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதியில் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்தப்படும் என பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராவ் கூறியுள்ளார்.