முதல் முறையாக யாருமே செய்யாத ஃபுட் டெலிவரி! விண்வெளி வீரர்களுக்கு ஃபுட் டெலிவரி செய்து அசத்திய உபேர்!!

இன்றைய சூழலில் அனைத்து பொருள்களிலும் வீட்டிற்கு வந்து கொடுக்கும் அளவிற்கு டெக்னாலஜி மாறியுள்ளது. இதன் விளைவாக மென்பொருள்கள் தொடங்கி உணவுப் பொருட்கள் வரை என அனைத்தும் வீட்டிற்கே டெலிவரி செய்யும் முறைக்கு வந்துள்ளது.

ஒரு போன் செய்தாலே போதும் வீட்டிற்கே உணவு சேவை கொண்டுவரப்படுகிறது. இந்த உணவு சேவையானது தற்போது பூமியை தாண்டி வானத்திலும் நிகழ்ந்துள்ளது

உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ஃபுட் டெலிவரி  uber ஈட்ஸ் ஆனது செய்துள்ளது. அதன்படி விண்வெளி வீரர்களுக்கு uber ஈட்ஸ் ஃபுட் டெலிவரி செய்து உலகத்தை வியக்க வைத்துள்ளது.

விண்வெளி வீரர்களுக்கு உணவு வழங்குவதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 9 மணி நேர ராக்கெட்டில் பயணம் செய்த ஜப்பானியர் கோடீஸ்வரருடன் இணைந்து விண்வெளிக்கு உணவை அனுப்பும் முதல் டெலிவரி சேவையாக uber ஈட்ஸ் செய்துள்ளது. பலரும் இதனைப் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment