Connect with us

Zomato-வில் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரியா? இதனால் என்ன ஆகும் தெரியுமா?

zomato

தமிழகம்

Zomato-வில் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரியா? இதனால் என்ன ஆகும் தெரியுமா?

Zomato-வில் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரியா? இதனால் என்ன ஆகும் தெரியுமா?

இன்றைய உலகில் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே கிடைக்கிறது. அதுவும் குறிப்பாக தற்போது தமிழகத்தில் அதிகளவு ஆன்லைன் மூலமாக உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் swiggy, Zomato உள்ளிட்ட நிறுவனங்கள் மிகவும் famousஆக காணப்படுகிறது.

இந்த நிலையில் Zomato நிறுவனம் இனிமேல் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று Zomato நிறுவனத்தின் சிஇஓ அறிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் போலீசார் விளக்கம் கேட்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி என்ற Zomato நிறுவனத்தின் திட்டம் குறித்து விளக்கம் கேட்க போக்குவரத்து போலீசார் முடிவு எடுத்துள்ளனர்.

பத்து நிமிடத்தில் டெலிவரி என்ற Zomato புதிய அறிவிப்பால் போக்குவரத்து விதிமீறல்களுக்கும் விபத்துகளுக்கும் வழிவகுக்கும் என்று போலீசார் தகவல் அளித்தனர். Zomato  நிறுவனம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top