தீபாவளி ஸ்பெஷல்!! சுவையான தேங்காய் லட்டு செய்து எப்படி?

தீபாவளி பண்டிகை தொடங்கினாலே வீடுகள் தோறும் பலகாரங்கள் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சுவையான தேங்காய் லட்டு செய்வது எப்படி பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

2 கப் துருவிய தேங்காய்

பால் – 1/2 லிட்டர்

சர்க்கரை

ஏலக்காய் தூள் – ஸ்பூன்

எப்படி செய்வது?

அடுப்பில் வாணலை வைத்து சூடானதும் 2 கப் தேங்காய் துருவலை சேர்ந்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். சிறிது நேரம் கழித்து நெய் தடவி, கலவையிலிருந்து லட்டு போல் சிறிய உருண்டைகளை எடுத்து உருட்டவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் லட்டு தாயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews