News
தந்தையை தொடர்ந்து மகனும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகத்தில் பயங்கரமான பெறுகிறது. தமிழகத்தில் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர்களை முதலில் அறிவித்தது .பின்னர் சில தினங்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டது.

இன்று காலை மெரினாவில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி, கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர், மு க ஸ்டாலின் மகன் ,நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவர் வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ளார். மேலும் அவர் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது .வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஆட்டோவின் மூலம் மக்களுக்கு வணக்கம் செய்து வருகிறார்.
