தனுஷ் சிவகார்த்திகேயனை தொடர்ந்து தெலுங்கில் கால்பதிக்கும் மற்றொரு நடிகர்….!

சமீபகாலமாகவே தமிழ் நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேபோல் தெலுங்கு நடிகர்களின் படங்களும் தமிழில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழில் தளபதி விஜய், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் தற்போது முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றனர்.

vishnu vishal

தற்போது இவர்களின் வரிசையில் இளம் நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளார். சமீபகாலமாக விஷ்ணு விஷால் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. ஆனால் அவர் நடிப்பில் உருவாகியுள்ள எஃப்ஐஆர் படம் நீண்ட நாட்களாகவே வெளிவராமல் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் இணைந்துள்ளாராம். தற்போது நடிகர் ரவி தேஜா நடிப்பில் ராமாராவ் ஆன் ட்யூட்டி, கில்லாடி, ராவணாசுரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில், ராவணாசுரன் படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக டாக்டர் பட புகழ் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரவிதேஜா அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் தான் நடிகர் விஷ்ணு விஷால் அவருடன் இணைந்து நடிக்க உள்ளாராம். இந்த செய்தியை ரவி தேஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விஷ்ணு விஷாலே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது வெளியாகும் டாப் நடிகர்களின் படங்கள் அனைத்தும் பான் இந்தியா படங்களாகவே வெளியாகி வருவதால் ரவி தேஜா நடிப்பில் உருவாக உள்ள இந்த படமும் பான் இந்தியா படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்கள் விரைவில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment