வீட்டில் மகாலட்சுமியின் பேரருள் தங்க…எளிய வழி இதுதாங்க…!

அந்தக்காலத்தில் பணத்தைக் காசு என்றும் நாணயம் என்றும் செல்வம் என்றும் கூறுவர். அதே போல அவர் ரொம்ப நாணயமானவர் என்றால் நேர்மையானவர் என்று பொருள். காசை மதித்தால் தான் நமக்கு வந்து சேரும்.

சில்லரை இருக்கிறவர்களுக்குத் தான் எங்கும் மதிப்பு. சில்லரை இருக்கிறவர்களைத் தான் பஸ்சில் ஏறச் சொல்வார்கள். அதனால் சில்லரை தானே என மதிக்காமல் இருந்து விடாதீர்கள். சில்லரையை மதிக்கும் குடும்பங்களில் தான் மகாலெட்சுமி தங்குவாள்.

coins 1
coins

குபேரனுக்குப் பிடித்த ஓசை சில்லரை தான். அவை தான் கலகல என ஓசையை எழுப்பும். வீட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் இந்த நாணயம் இருக்க வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் போல நாணயம் இருப்பது அவசியம்.

நாணயம் என்பது பணம் சம்பாதிப்பதிலும், செலவழிப்பதிலும், பேச்சிலும் இருக்க வேண்டும். நாணயம் இருக்கான்னு கேட்டா, காசு இருக்கா என்பது மட்டும் பொருள் இல்லை. நேர்மையானதாக இருக்கிறதா? குற்றமில்லாததாக அந்தப் பொருள் இருக்கிறதா என்று தான் அர்த்தம்.

அந்தக்காலத்தில் காசில பார்த்தா பல விதமான சின்னங்கள் இருக்கும். ஒரு வராகப்பெருமாள் படமோ, தாமரை படமோ இருக்கும். அல்லது விலங்குகள், பறவைகள், ரிஷபம், யானை படங்கள் இருக்கும். அதனால தான் அந்தக்காலத்தில எல்லோரது வீட்டிலும் உண்டியல் வச்சாங்க. இப்போ ஒரு சிலர் தான் வச்சிருக்காங்க.

man undiyal
undiyal

உண்டியலானது மண்கலமாகவோ, செம்பினாலோ அல்லது பித்தளையாகவோ இருக்கலாம். அதுல காசுகளைப் போட்டு வரணும். வீட்டில் ஒரு யோகம் நடத்துனா புரோகிதர்கள் சில்லரை காசுகளைத் தான் கேட்பாங்க. மொய் எழுதும் போதும் 100 என்று செய்ய மாட்டார்கள். 101, 501, 1001 என்று தான் செய்வார்கள்.

சில்லரை எங்கே இருக்குன்னு அந்த ஒரு ரூபாய்க்காகத் தேடுவார்கள். இந்தக்காசு தான் அந்த 100 ரூபாயின் மதிப்பை ஏற்றுகிறது. வீட்டில் கண்ட இடத்தில் காசுகளைப் போட்டு வைக்கக்கூடாது. கண்ணாடிக்குடுவையிலோ, உண்டியலிலோ போட வேண்டும். இந்தக்காசு தான் ரூபாய் நோட்டை வளர்க்கும் வித்தை.

பூஜை அறையில் ஒரு உண்டியல், சமையல் அறையில் சின்ன பாத்திரத்தில் காசு சேர்த்து வைக்க வேண்டும். பீரோவில் சின்ன டப்பாவில் சில்லரை காசுகளை அவசியம் வைக்க வேண்டும். வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று தூப தீபம் காட்ட வேண்டும். மகாலட்சுமி சில்லரை காசுகளில் தான் தங்குவாள்.

kuberan
kuberan

பணம வீட்டில் ஆங்காங்கே எடுத்து வைக்கும்போது மகாலட்சுமி தங்குவாள். அதை வைக்கும்போது மட்டுமல்லாமல் செலவும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் குபேரன் தங்குவார். இது ஒரு பெரிய விஷயமாக எடுத்து பின்பற்ற வேண்டும். எளிமையான யாரையும் பாதிக்காத இந்த வழியைப் பின்பற்றுங்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.