News
மழை இல்லை என்றாலும் பனிமூட்டம் தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது என்பதும் குறிப்பாக இரண்டு புயல்கள் அடுத்தடுத்து வீசியபோது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது என்பதும் தெரிந்ததே
குறிப்பாக சென்னையில் கடந்த மாதம் நல்ல மழை பெய்ததை அடுத்து அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன என்பதும் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இந்த ஆண்டு வராது என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நாளை மழை இருக்காது என்றாலும் பனிமூட்டம் அதிகமாக காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ’தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில் இனி மழை பெரும்பாலும் இருக்காது என்றே கணிக்கப்பட்டது உள்ளது
