பணத்தையே பிரதானமாக்கி வெளிவந்த படங்கள் ஜெயித்ததா…? இது உங்கள் பார்வைக்கு…!

“பணம் என்னடா… பணம் -… பணம்…?” என்று ஒரு திரைப்படப்பாடல் உண்டு. பணம் ஒன்றையே இந்த உலகம் பெரிதாக நினைக்கிறது. பணக்காரனாக இருந்தால் அவனுக்குத் தனி மரியாதை, அந்தஸ்து என எல்லாம் கொடுக்கிறது.

ஏழை என்றால் அவனை ஏறெடுத்தும் பார்க்காது. பணம் ஒன்றே பிரதானமான ஒன்று. அதே நேரம் பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுவது தவறு. அந்த வகையில் பணம் சினிமாவில் எப்படி எல்லாம் வந்துள்ளது என்பதைப் பார்க்கலாமா…

பணம்

Panam
Panam

1952ல் என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில் வெளியான படம். இயக்கியதும் அவர் தான். திரைக்கதையை மு.கருணாநிதி எழுதினார்.

படத்தில் சிவாஜி, பத்மினி, டி.ஏ.மதுரம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, தங்கவேலு உள்பட பலரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார். இது சிவாஜியின் 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் படைத்தவன் – பணத்தோட்டம்

Panathottam
Panathottam

1965ல் வெளியான படம். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர், கே.ஆர்.விஜயா, சௌகார் ஜானகி, நாகேஷ், அசோகன், மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளனர்.

பாடல்கள் அனைத்தும் செம சூப்பர். டி.எம்.எஸ்.சின் இனிமையான குரலில் ஒலிக்கும் கண் போன போக்கிலே கால் போகலாமா என்ற தத்துவப்பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.

இதேபோல 1963ல் சங்கர் இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் பணத்தோட்டம் படம் வெளியானது. இதுவும் செம மாஸ் படம் தான். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பேசுவது கிளியா இல்லை என்ற சூப்பர்ஹிட் காதல் பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.

பணக்காரன்

Panakkaran
Panakkaran

1990ல் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினியோட படம். கௌதமி தான் நாயகி. ஜனகராஜ், விஜயகுமார், ராதாரவி, சுமித்ரா, சரண்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அத்தனையும் டாப் ரகங்கள்.

படத்தில் சூப்பர்ஸ்டாரோட நடிப்பு பட்டையைக் கிளப்பும். படம் 200 நாள்களைத் தாண்டி ஓடி மெகா வெற்றி பெற்றது. படத்தை இயக்கியவர் பி.வாசு.

குபேரன்

Kuberan
Kuberan

ராமநாராயணன் இயக்கத்தில் 2000ல் வெளியான கார்த்திக் படம் குபேரன். நகைச்சுவை அம்சங்களுடன் வந்து பட்டையைக் கிளப்பியது. கௌசல்யா, மணிவண்ணன், தியாகு, அஞ்சு, மந்த்ரா, சிந்து உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

செல்வந்தன்

2015ல் வெளியான தெலுங்கு படத்தின் ரீமேக். கொரட்டல சிவாவின் இயக்கத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க, சுருதிஹாசன் நாயகியாக பட்டையைக் கிளப்பியுள்ளார். படத்தின் கதையே நமக்கு ரசனையைத் தூண்டிவிடும்.

அதாவது எவ்வளவு தான் பெரிய பணக்காரனாக இருந்தாலும் தன்னோட சொந்த கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி படத்தை எடுத்துள்ளனர். படத்தில் ஜெகபதி பாபு, சுகன்யா, ராஜேந்திர பிரசாத், சித்தாரா உள்பட பலர் நடித்துள்னர். படத்தின் நாயகன் மகேஷ்பாபு சும்மா பட்டையைக் கிளப்பியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...