
Tamil Nadu
‘பாலாற்றில் பொங்கிய நுரை’….கனமழையை லாபகரமாக பயன்படுத்திய தோல் தொழிற்சாலைகள்!!!
எதிர்பாராத விதமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மத்திய தமிழகம் பகுதியில் நேற்றைய தினம் கனமழை பெய்தது.
இந்த நிலையில் தென் தமிழகத்தில் தற்போது மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் பல இடங்களில் ஆறுகள் நிரம்பி ஓடுகின்றன. இந்த மழையில் சோகம் என்னவென்றால் பாலாற்றில் நுரைகள் பொங்கி வழிகிறது.
திருப்பத்தூர்-ஆம்பூர் அருகே பாலாற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் நுரை பொங்கி காட்சியளிக்கிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பகுதியில் உள்ள மாராபட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழையை பயன்படுத்தி சுற்றுப்புற வட்டாரங்களில் இருக்கும் தோல் தொழிற்சாலைகள் சாயக் கழிவுகளை ஆற்றில் கலந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
