Connect with us

தலைநகர் சென்னையில் குவியப் போகும் பறக்கும்படை! இனி குழுக்கள் மூன்று அல்ல ஆறு…..

parakum padai

செய்திகள்

தலைநகர் சென்னையில் குவியப் போகும் பறக்கும்படை! இனி குழுக்கள் மூன்று அல்ல ஆறு…..

தலைநகர் சென்னையில் குவியப் போகும் பறக்கும்படை! இனி குழுக்கள் மூன்று அல்ல ஆறு…..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி விட்டது. ஏனென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க இன்னும் நான்கு நாட்கள் கூட இல்லை என்பதுதான் உண்மை. இதனால் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனைச் சாவடிகளிலும் வாகன பரிசோதனைகளிலும் தங்களது முழு ஈடுபாட்டை செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. 200 வார்டுகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் தற்போது பறக்கும்படை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் பறக்கும்படை குழு 3 ஆக உள்ளது. இந்த மூன்று குழுக்களை ஆறாக அதிகரிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 17ஆம் தேதி முதல் தினமும் காலை, மாலை, இரவு என மொத்தம் 3 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தலா ஆறு பறக்கும் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top