மருத்துவர்களை கண்காணிக்க பறக்கும் படை – ஐகோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை அரசு மருத்துவ மனையில் மருந்துகளை காலாவதியாக செய்ததாக பணி ஓய்வு காப்பக பொருப்பாளர் முத்துமாலை ராணி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன் அமர்வுக்கு வந்தது. அப்போது முத்துமாலை ராணிக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ததாக கூறினார்.

திருச்செந்தூரில் அதிசயம்!! கடலில் இருந்து வந்த நந்தி சிலை..!!

அதே போல் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தவிர அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகார நிலையங்களில் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்துவதற்கு மண்டல அளவில் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குளிர்பானத்தில் மது! 16-வது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது!

மேலும் , இந்த பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment