வேகமெடுக்கும் ஃப்ளூ காய்ச்சல்: பொதுமக்கள் தவிப்பு!!

கடந்த சில நாட்களாக புதுச்சேரி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் இத்தகைய காய்ச்சலால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாக பரவியதால் பொதுமக்கள் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது.

அதன் படி, கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை கருத்தில்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment