Connect with us

#Alert கொஞ்ச நேரம் தான் டைம் இருக்கு… பவானி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Flood

செய்திகள்

#Alert கொஞ்ச நேரம் தான் டைம் இருக்கு… பவானி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திற்குட்பட்ட காவேரி கரையோர கிராமங்களில் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து தற்போது 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மாலை 5 மணி அளவில 80 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.

அதன் காரணமாக பவானி வட்டத்திற்குட்பட்ட பவானி, வரதநல்லூர், சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, ஊராட்சிகோட்டை உள்ளிட்ட காவேரி கரையோர‌ கிராமங்களில் உள்ள மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பவானி , கந்தன்பட்டறை பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top