
தமிழகம்
வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.
இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் தொடர்ந்து நிரம்பி கொண்டு வருகின்றன. அதிலும் அணைகள் ஓரளவிற்கு முழு கொள்ளளவை எட்டி உள்ளதாக தெரிகிறது. இதனால் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேனி மாவட்டம் பொதுப்பணித்துறையினர் வைகை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் 71 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் மழை பெய்ததால் 66 அடி எட்டியதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் வினாடிக்கு 2288 கன அடி நீர் வரும் நிலையில் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டவுள்ளதால் இத்தகைய வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
