Connect with us

ஒட்டுமொத்த காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

காவிரி

தமிழகம்

ஒட்டுமொத்த காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

இன்று காலை 11 மணி முதல் நீர் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக தகவல் கிடைத்தது. ஏனென்றால் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டமான 120 அடியை காவேரி நீர் நெருங்கி உள்ளதாக தெரிகிறது.

தற்போது அங்கு நீர்மட்டம் 118 அடியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வினாடிக்கு சுமார் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அங்கு நீர் வரத்தானது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 349 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் காவிரி கரையோர மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மேட்டூர் அணை நீர் நிரம்பும் நிலையில் இருப்பதால் டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.

அணைக்கும் வரும் நீர் அப்படியே திறக்கப்படலாம் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் ஒகேனக்கல் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று மொத்த காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top