ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்… 8 பேர் சடலமாக மீட்பு!!!

வடமாநிலங்களை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி கடல்போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துர்கா தேவி சிலைகள் கரைக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்… 8 பேர் சடலமாக மீட்பு!!!

இத்ததைய விபத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இத்தகைய சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தற்போது 4 பெண்கள் உட்பட 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், 13 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அக்.10 வரை ஆபத்து; மீனவர்களுக்கு அதிரடி எச்சரிக்கை!

மேலும், அப்பகுதியின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் புலு சிக் பராய்க் இறப்பு எண்ணிக்கையானது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment