
செய்திகள்
கர்நாடகா: சுப்ரமண்யா கோவிலை சூழ்ந்த வெள்ளம்; இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு!!
நம் தமிழகத்தில் தான் தற்போது அதிக கன மழை பெய்கிறது என்று நினைக்கிற நேரத்தில் கர்நாடகாவில் அதைவிட அதிக கன மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் கர்நாடக மாநில அரசு காவிரி நீர் பிழிகுண்டுலு எல்லையில் இருந்து 50,000 கன அடியாக இன்று திறந்து விட்டுள்ளது.
நேற்றைய தினம் 46 கனஅடி நீரினை திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கர்நாடகாவில் சுப்பிரமணிய கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ள.து கர்நாடகா மாநிலத்தில் குமாரதரா நதியில் அதிகரித்த நீர்வரத்து காரணமாக குக்கே சுப்ரமண்ய கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
கோயில் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீரில் சிக்கி தவித்துக் கொண்டு வருகின்றனர். மேலும் குக்கே சுப்ரமண்ய கோவில் அருகே வெள்ள நீரின் பாதிப்பு காரணமாக குடிசை வீடு இடிந்ததில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணி தாமதம் அடைந்தால் இரண்டு சிறுமிகளை உயிருடன் மீட்க முடியவில்லை என்று அதிகாரிகள் தகவல் அளித்தனர். 11 வயது சிறுமிகள் சுருதி மற்றும் ஜன ஸ்ரீ ஆகியோர் சடலமாகவே மீட்கப்பட்டனர். வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அடுத்த ஒரு வாரத்திற்கு பக்தர்கள் குக்கே சுப்ரமண்ய கோயிலுக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
