சான் பிரான்சிஸ்கோ – ஹவாய்க்கு இடையிலான சேவையில் உள்ள அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமனம் பசபிக் கடல் பகுதியின் மீது பறந்து சென்று கொண்டிருந்த போது விமான என்ஜினின் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது.
விமானம் தனது பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரம் கழித்து சற்று தாறுமாறான அசைவுகளுடன் இருந்துள்ளது. பின்னர் அதற்கடுத்து ஒரு பெரிய சத்தம் கேட்டுள்ளது. அப்போது விமானத்தின் வலது பக்கத்தில் இருந்த ஒரு என்ஜினின் மேல் பகுதி கழண்டு விழுந்துள்ளது.
சிறிது நேரம் கழித்து பின்னர் மொத்தமாக அந்த எஞ்சினே விழுந்துள்ளது. இதனால் விமானம் நிலை தடுமாறியுள்ள நிலையில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த விமானிகள் மீதமுள்ள 3 என்ஜின்களுடன் சமாளித்து விமானத்தை தரையிறக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஹவாயில் விமானம் தரையிரங்கியது.
இதனால் 363 பயணிகள், 8 பணியாளர்கள், 2 விமானிகள் ஆகியோர் இந்த சம்பவத்தால் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக தரையிறங்கினர்.
இதற்கான காரணம் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை.