Connect with us

விளையாட்டாக அனுப்பிய மெசேஜால் விமான நிலையத்தில் பரபரப்பு!!

airport mumbai 022519

செய்திகள்

விளையாட்டாக அனுப்பிய மெசேஜால் விமான நிலையத்தில் பரபரப்பு!!

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விமானத்தில் பயணித்த ஆண் நபர் ஒருவர் தனது நெருங்கிய தோழிக்கு நீ ஒரு வெடிகுண்டு என்பதை குறிப்பிட்டு, “U r da bomber” என மெசேஜ் ஒன்றை செய்துள்ளார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர் உடனடியாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தார். இதனால் அச்சமடைந்த அதிகாரிகள் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நினைத்துள்ளனர்.  உடனே திடீரென பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் ஆபத்தினை விளைவிக்கக் கூடிய பொருள் எதுவும் இல்லை என்பதும் உறுதியான நிலையில் மெசேஜ் அனுப்பியவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது தோழி விளையாட்டாக மெசேஜ் அனுப்பியதாக தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக சுமார் 6 மணி நேரம் கழித்து விமானம் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், வேடிக்கையாக ‘வெடிகுண்டு’ என குறிப்பிட்டு மெசேஜ் இவ்வளவு வினையாது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top