ஃபிளாஷ்பேக் 2021: புதுவையில் 7 வது முறையாக குடியரசு ஆட்சி அமலுக்கு வந்தது…..!

யூனியன் பிரதேசமான புதுவையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் கட்சி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. எனவே புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவ மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி பிப்ரவரி 25 ஆம் தேதி புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

நாராயணசாமி

புதுவை அரசியல் சற்று வித்தியாசமானது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் இன்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மாநிலத்திற்கும் யூனியன் பிரதேசத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அந்த வகையில் இதுவரை புதுவையில் 7 முறை ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. ஆனால் சொந்த கட்சி வேட்பாளர்களால் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது இதுவே முதல் முறை.

பாரூக் மரைக்காயர்

அதன்படி இதுவரை புதுவையில் நடந்த ஆட்சி கலைப்பு விவரங்களை காணலாம். முதல் முறை கடந்த 1969 முதல் 1973 வரையிலான காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் பாரூக் மரைக்காயர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

ராமசாமி

இரண்டாவது முறை 1974ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ராமசாமி முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் அரசுக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாததால் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு 21 நாளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மூன்றாவது முறை அதிமுக ராமசாமி முதல்வராக இருந்த சமயத்தில் 1977 1980 வரை குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. பின்னர்
1980 முதல் 83 வரையிலான காலத்தில் திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து 1990ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது ஆட்சி கவிழ்ந்தது.

நாராயணசாமி

மேலும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு 2016ஆம் ஆண்டு பதவியேற்று இறுதியாண்டைப் பூர்த்தி செய்ய இருந்த நிலையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்ததால் பெரும்பான்மை இல்லாமல் நாராயணசாமி ஆட்சியை இழந்தார். இவ்வாறு 6 முறை ஆட்சி கலைந்துள்ளது. தற்போது ஏழாவது முறை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment