ஃபிளாஷ்பேக் 2021: ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா…..!

ஒவ்வொருவரும் பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள். பதக்கம் வென்றால் மட்டும் போதும் என நினைக்காமல் நாம் வென்ற பதக்கம் தலைமுறை கடந்து பேச வேண்டும் என நினைக்கும் வீரர்கள் மட்டுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.

நீரஜ் சோப்ரா

அந்த வகையில் இந்தியாவின் தங்க மகன் என மக்களால் பாராட்டப்பட்டவர் தான் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி டோக்கியோவில் நடந்த 2020 ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் விளையாட்டில் 87.58 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் வென்றார்.

 

நீரஜ் சோப்ரா

இது வெறும் சாதாரண தங்கப்பதக்கம் கிடையாது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக, ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியா தங்கம் வென்றது இதுதான் முதல் முறை. 120 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தடகள போட்டியில் தங்கம் வென்ற பெருமை நீரஜ் சோப்ராவையே சேரும்.

 

நீரஜ் சோப்ரா

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி முனையை செலுத்தினார். இரண்டாவது முயற்சியில் அதைவிட கூடுதலாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதலில் 14 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திற்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முன்னேறினார். அதன்படி உலகத் தரவரிசையில் ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

120 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று காலத்திற்கும் தன் பெயர் நிலைத்து நிற்குமாறு வரலாற்றில் இடம் பிடித்து விட்டார் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்த நாள் மறக்க முடியாத நாளாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment