கொடி கட்டி பறக்குது மெக்கானிக் கடை! ஏராளமான வண்டிகள் குவிப்பு!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சாலைகள் அனைத்தும் மழை நீருக்குள் மூழ்கி உள்ளது. இதன் மத்தியில் பலரும் இருசக்கர வாகனத்தை இந்த மழை நீருக்குள் ஓட்டிச் செல்கின்றனர்.

மழை

 

ஏனென்றால் அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்லும் நிலைக்கு காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.

ஒருசிலர் மழையில் சாகசம் காட்ட வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மழைநீரில் பயணிக்கும் அவல நிலையில் காணப்படுகிறது.மழைநீரில் வண்டி ஓட்டினால் பெரிதும் வண்டியின் இன்ஜின் பாதிக்கப்படும்.

இந்த நிலையில்  தற்காலிக பழுதுபார்க்கும் இடமாக மாறியுள்ளது வடபழனி-கோயம்பேடு சாலை.ஏனென்றால் சென்னையில் பெய்த கன மழையால் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் மழைநீரில் சக்கரங்கள் மூழ்கும் அளவிற்கு வண்டியை ஓட்டிச் செல்கின்றனர்.

அதனால் அவர்கள் வண்டியில் பல கோளாறுகள் ஏற்படுகிறது. அதனை தவிர்க்க வடபழனி-கோயம்பேடு இணைப்பு சாலையில் தற்காலிக பழுதுபார்க்கும் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கடையில் காலை முதலே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கொண்டு வருகின்றனர். 20க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இருந்த வண்ணமாகவே காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் வரிசைகட்டி வந்து இங்கு பழுது பார்க்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment