5 வயது குழந்தைக்கு கல்லீரல் தானமாக கொடுத்த தாய்.. வெற்றிகரமாக நடந்த மாற்று அறுவை சிகிச்சை..!

ஐந்து வயது குழந்தைக்கு அந்த குழந்தையின் தாய் கல்லீரல் தானமாக கொடுக்க முன் வந்ததை எடுத்து குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்ததாகவும் இந்த அறுவை சிகிச்சை கேரளாவை சேர்ந்த மருத்துவர்கள் செய்து சாதனை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கேரளாவில் ஐந்து வயது குழந்தைக்கு கல்லீரல் தொற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த குழந்தை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வது என்பது சிக்கலாக இருக்கும் என்றும் மருத்துவ குழு தெரிவித்தனர். மேலும் கல்லீரல் தானம் செய்பவர்கள் குறித்த தகவலும் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் குழந்தையின் தாயான 25 வயது பெண் தன்னுடைய கல்லீரலை தானமாக தருவதற்கு ஒப்புக்கொண்டு தன்னுடைய குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மருத்துவரிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மருத்துவர்கள் குழந்தையின் தாய் அளித்த கல்லீரலை ஐந்து வயது குழந்தைக்கு பொருத்த முடிவு செய்தனர்.

இரைப்பை அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சிந்து தலைமையில் ஐந்து வயது குழந்தைக்கு நேற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுவாக அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வது அரிதானவை என்றும் ஆனால் இன்று வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகவும் குழந்தையின் கல்லீரல் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாகவும் கூறப்பட்டதை அடுத்து தாய் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews