சென்னையில் பரபரப்பு; கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி!

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் பங்குனி மாத தீர்த்தவாத பூஜை இன்று காலை மூவரசம்பட்டு கோவில் குளத்தில் நடைபெற்றது இதில் மொத்தம் 25 தன்னார்வலர்கள் கோவில் தெப்பதை சுமந்து சென்றனர்.

அதில் 10 பேர் மூழ்கியதால் உடன் வேளச்சேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு 5 பேர் மீட்கப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்கள் நீரில் மூழ்கி இறந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

இறந்தவர்கள் லோகேஷ் , பனேஷ், ராகவன் , ராகவ் , சூர்யா ஆகிய 5 பேர் உடல் நீரில் மூழ்கி இறந்ததாக முதல் தகவலில் தெரிகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக காவல்துறைக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி நடந்ததாக காவல்துறை சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.