Connect with us

கனியாமூர் பள்ளி வன்முறை-மேலும் ஐந்து பேர் கைது.!! தீவிரம் காட்டும் போலீஸ்;

kallakurichi 16580395713x2 1

தமிழகம்

கனியாமூர் பள்ளி வன்முறை-மேலும் ஐந்து பேர் கைது.!! தீவிரம் காட்டும் போலீஸ்;

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பகுதியில் இயங்கி கொண்டுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் பெரும் கலவரம் இடித்தது. அதிலும் கலவரக்காரர்கள் அங்குள்ள வாகனங்களை அடித்து தீ வைத்தனர்.

மேலும் மாணவ மாணவிகளின் மாற்று சான்றிதழையும் கிழித்து நாசம் செய்தனர். ஏனென்றால் கலவரத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் உயிரிழந்திருந்தார். எனவே மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இத்தகைய அசம்பாவிதத்தில் முறையின்றி ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து கைது செய்து கொண்டு வருகிறது. அதிலும் காவல்துறையின் வாகனங்களில் தீவைக்க நபரின் உடையை வைத்து கைது செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் அவர் நீல நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற சட்டை அணிந்து இருந்ததாகவும் தெரிந்தது. இந்த நிலையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கணியம்பூர்  பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கில் இந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top