Connect with us

ஐந்து மாவட்ட மக்களே உஷார்: கனமழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu

ஐந்து மாவட்ட மக்களே உஷார்: கனமழைக்கு வாய்ப்பு!

9e69060f692d1025d3a4727ef0941016-1

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வபோது அறிவித்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை கோவை நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது 

சென்னையை பொருத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

                        

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top