கொரோனா வைரஸ் பாதிப்பு திடீர் அதிகரிப்பு… 5 நாட்கள் ஊரடங்கு என அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகாரித்ததன் காரணமாக வடகொரியாவில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் அதனால் தலைநகர் பீஜிங் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சீனாவை அடுத்து வடகொரியாவிலும் கொரனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்நாட்டில் உள்ள நிலவரங்கள் எதுவுமே வெளியில் தெரியாததால் எந்த அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பது உலக சுகாதார மையத்திற்கு தெரியவில்லை.

இந்த நிலையில் திடீரென வடகொரியாவில் 5 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவின் தலைநகர் உள்பட ஒரு சில நகரங்களில் மிக மோசமான கொரோனா பாதிப்பு இருந்து வருவதை அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் 5 நாட்களுக்கு பின்னர் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவு நீடிப்பது அல்லது விலக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்ட ஐந்து நாட்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உடையவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி உள்ளிட்ட முன் பாதுகாப்பு நிலையில் பாதுகாப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வடகொரியா அரசு அறிவித்துள்ளது. வடகொரியாவில் திடீரென ஐந்து நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.