
Entertainment
விக்ரம் படம் வெளியான ஐந்து நாள் வசூல் தெரியுமா? தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கமலை விட பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
குறிப்பாக பத்து நிமிடம் தான் சூர்யா வந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இதைப் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கும் என கூறப்படுகிறது.விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஜெயராமின் மகன் காளிதாசன், கமல்ஹாசனின் மகனாக வருகிறார். சந்தானபாரதி, செம்பன் வினோத் ஜோஸ் (மலையாள நடிகர்) ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வார இறுதியில் உலகளவில் ரூ.150 கோடி வசூலை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது.வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது.
அதன்படி, படம் வெளியான 7 நாட்களில் ‘விக்ரம்’ படம் தமிழ்நாட்டிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கேரளாவில் மட்டும் 35 முதல் 40 கோடி ரூபாய் வசூல் சாதனை புரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், பார்வையாளர்களின் எண்ணிக்கை திரையரங்குகளில் கூட்டம் மோதுவதால் விரைவில் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் விரைவில் இணைந்து விடும் இந்த படம் .
