கடந்த சில தினங்களாகவே மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி பல மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த நிலையில் கடலூர் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த போராட்டம் அரசு விதித்த கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் இழு வலை மீதான கட்டுப்பாடுகளை நீக்க கோரி விசைப்படகு மீனவர்கள் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் துறைமுகம் மீன்வளத் துறை அலுவலகம் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படி மீன் பிடித்தால் எந்த ஒரு மீனவரும் மீன் பிடிக்க முடியாது என்றும் விசைப்படகு மீனவர்கள் கூறியுள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தங்களது படகுகளை ஒப்படைப்பதுடன் தொடர் போராட்டம் நடத்துவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். துறைமுகத்தில் தொழில் செய்ய அனுமதி வேண்டும்; டீசலை மானிய விலையில் தடையின்றி தர வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்.