
Tamil Nadu
மீனவர்களே இன்றும் எச்சரிக்கை.!! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்;
கடந்த சில நாட்களாகவே வங்க கடல் பகுதிகளில் புயல் உருவாகி கொண்டு காணப்பட்டது. அதுவும் குறிப்பாக கடந்த வாரம் அசனி புயல் காரணமாக தமிழகம் எங்கும் பரவலாக மழை கிடைத்தது.
இந்த புயல் வடக்கு நகர்ந்து ஆந்திரா, ஒரிசா கரையை கடந்தது. இந்த நாட்களில் மீனவர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுவும் தென் வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கை மீண்டும் தொடர்வதாக தெரிகிறது. அதன்படி இன்று முதல் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மே 17ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மே 17ஆம் தேதி வரை பலத்த காற்று வீசி வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
