சில மணி நேரத்துக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நாளைய தினம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக கூறினார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு திரும்பி வர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நவம்பர் 9ஆம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வங்கக்கடலில் உள்ள மீனவர்கள் ஒன்பதாம் தேதி கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றாக வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.