மீனவர்களே உஷார்!! அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலில் உருவாகி இருக்கும் அசானி புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நாளை வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் கூறியது.

அதோடு ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மையம் கூறியுள்ளது.

இதனால் மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment