தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தில் உள்ள மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளது.
அதன்படி ஜனவரி 1ஆம் தேதி தங்கச்சிமடத்தில் திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் என்று மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடந்த மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மீனவர்கள் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 7வது நாளாக நடத்தும் வேலை நிறுத்தம் தொடர்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்கு மத்திய இணை அமைச்சர் முருகன் மீனவர்கள் கைது தடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதன்படி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மீனவர்கள் எல்லை தாண்டுவது தடுக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார். மாற்று கட்சியினர் கருத்து சொன்னால் அதனை ஏற்காமல் தடுக்கும் திமுக அரசின் செயல்களை ஏற்க முடியாது என்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.