தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று கூறியது.
இதற்கு காரணம் வங்க கடல் பகுதியில் நிலவிக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா பகுதியில் நிலவிக் கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளது.
அதன்படி மீனவர்கள் யாரும் மன்னார் வளைகுடா பகுதி, கேரள-கர்நாடகா வனப்பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.
மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் 14 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தேவாலாவில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.