கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உயிரிழப்பு: சீமான் அறிக்கை

dcbdf34c0b9069f87000e8c9e934f4ee

முறையாக வடிவமைக்கப்படாத கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்திலுள்ள இரையுமன்துறை மீன்பிடித் துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் துறைமுகத்திற்கு அலை அடிக்கும் அவலநிலை உள்ளது என்றும் இதனால் காற்று வேகமாக வீசும் மாதங்களில் ராட்சஸ அலையால் மீனவர்கள் விபத்துக்குள்ளாவது வழக்கமாக நிகழ்வாக மாறிவிட்டது என்றும் சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடல் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீனவர்களையும் படகுகளையும் பாதுகாக்க மீனவர்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் மீன்பிடி துறைமுகம் சரியான சரியான வகையில் வடிவமைக்கப்படாமல் உள்ளது.

துறைமுகத்தின் உள்ளே இராட்சச அலைகள் உருவாகி மீனவர்களுக்கும் அவர்களின் படகுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று இதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி துறைமுகத்தில் மிக அருகிலேயே புதிதாக ஒரு தடுப்பணையை கட்டுவதால் ஆற்று நீர் கடலுடன் கலப்பதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் அலைகளால் கொண்டுவரப்படும் மணல்கள் சேர்ந்து மண்மேடு உருவாகிறது. மீனவர்களின் படகுகள் இந்த மணல் மேடுகளில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 4 முதல் 10 மீனவர்கள் வரை உயரிழந்து வரும் நிலையில் இன்னும் உயிரிழப்புகள் பொருள் இழப்புகள் உண்டாவதை தடுக்க தமிழக அரசு ஆய்வு செய்து துறைமுகங்களை சீர்படுத்த முன்வரவேண்டும் என சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment