Connect with us

எச்சரிக்கை! நாளை, நாளை மறுநாள் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

மீனவர்

தமிழகம்

எச்சரிக்கை! நாளை, நாளை மறுநாள் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

தமிழகத்தில் கோடை காலம் முடியும் நிலையிலும்கூட பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் வருகின்ற 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளது.

அதே போல் இலட்சத்தீவு பகுதி, கேரள – கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என கூறியுள்ளது.

fishmen

வருகின்ற 28-ஆம் தேதி இலட்சத்தீவு பகுதி, கேரள – கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என கூறியுள்ளது.

மேலும், 29-ஆம் தேதி கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 இலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top