தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு – நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

கடந்த பல வருடங்களாக தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்வது தொடர் கதையாக இருந்நு வருகிறது.

இந்த நிலையில் இராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற 69 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அடுத்தடுத்து சிறைபிடித்தது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையில் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாம்பன் மீனவர்களும் நாளை (23-12-2021) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment