Connect with us

மீனவர்களே அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை !!

மீனவர்

தமிழகம்

மீனவர்களே அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று மற்றும் நாளை இலட்சதீவு, கர்நாடகா, கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

18.05.2022 முதல்‌ 19.05.2022 வரை: இலட்சதீவு, கர்நாடகா, கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
வீசக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்பகுதி, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌
வீசக்கூடும்‌ என கூறியுள்ளது.

மேலும், வருகின்ற 20 ஆம் தேதியில் மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ பகுதி, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top