Connect with us

வலையில் மாட்டிய 2 டன் உடும்பு சுறா.. ஒரே நாளில் லட்சாதிபதி ஆன மீனவர்.

Untitled 121

செய்திகள்

வலையில் மாட்டிய 2 டன் உடும்பு சுறா.. ஒரே நாளில் லட்சாதிபதி ஆன மீனவர்.

வலையில் மாட்டிய 2 டன் உடும்பு சுறா.. ஒரே நாளில் லட்சாதிபதி ஆன மீனவர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் மீனவர் ஒருவருக்கு 2 டன் அளவிலான உடும்பு சுறா ஒன்று வலையில் மாட்ட ஒரே நாளில் லட்சாதிபதி ஆகிவிட்டார் என்றால் பாருங்களேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியில் மெல்பின் என்ற மீனவர் இருந்து வருகிறார்.

இவர் நேற்று முன் தினம் இவருடைய படகில் தனது நண்பர்கள் இருவருடன் குளச்சல் கடலில் மீன் பிடித்துள்ளார்.

அப்போது உடும்பு சுறா படகினை மோதியதோடு வலையில் வசமாக மாட்டிக் கொண்டது.

மேலும் அந்த சுறா மீனை படகில் தூக்கிப் போட்டுக் கொண்டு வர முடியாத நிலையில் வலையோடு இழுத்துவந்தனர்.

அதன்பின்னர் விசைப்படகு கிரேன் மூலம் கரை சேர்த்து எடையினைப் போட்டுப் பார்க்க அது 2 டன் எடை கொண்டு இருந்துள்ளது.

மேலும் 10 அடி நீளம் கொண்டு இருந்த சுறாவை பொதுமக்கள் சூழ்ந்து பார்வையிட்டனர்.

அதன்பின்னர் அந்த சுறாவை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். அங்கிருந்த மக்கள் உடும்பு சுறாவை வந்து பார்வையிட்டதுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top