மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

இந்திய கடற்படையால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதையறிந்து தமிழக முதல்வர் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் கால் அகற்றப்பட்டதா..? – வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்நிலையில் காயைமடைந்த திரு.வீரவேல் சிகிச்சைக்காக உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீனவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment