காசிமேட்டில் மீன்களின் விலை இருமடங்காக உயர்வு; அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள் !!

மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால்  காசிமேட்டில் மீன் வரத்து குறைந்துள்ள நிலையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக  செயல்பட்டு வருவதால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சங்கரா மீன் 400 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட நிலையில் தற்போது 800 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. சிறிய வஞ்சிரமீன் 400 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 1000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இறால், கடம்பை, பாறை போன்ற மீன்களின் விலையும் 400 முதல் 800 வரை விற்பனை செய்யப்படுவதால் காசிமேட்டில் அசைவ பிரியர்கள் குறைந்து வியாபாரிகள் மட்டுமே அதிகமாக குவிந்துள்ளனர்.

மேலும், மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த பிறகு தான் மீன்களின் விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment